காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜக-விற்கு எதிரான வாக்குகளை சிதறாமல் ஒருங்கிணைக்கவும் ஸ்டாலினின் தலைமை மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மாநிலக் கட்சிகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதால், அவரை ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக முன்னிறுத்தி கூட்டணியை வழிநடத்த வேண்டும் என்பதே மணி சங்கர் அய்யரின் கருத்தாகும்.