2026 தேர்தல் நெருங்கும் நிலையில் மதுரையில் திமுகவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மு.க.அழகிரியின் வலது கரமாகப் பார்க்கப்படும் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் உடனடியாகச் சேர விரும்புவதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

​இந்த அதிரடி முடிவு தென்மாவட்ட திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அழகிரி ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், பி.எம்.மன்னன் போன்ற ஒரு சீனியர் நிர்வாகி அதிமுக பக்கம் சாய்வது திமுக தலைமைக்குத் தலைவலியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது 2026 தேர்தலில் மதுரை மண்டலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.