ஜப்பான் உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட குட்டி குரங்கு ஒன்று, ஒரு பொம்மையை தனது தாயாக பாவித்து அரவணைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சிகாவா உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற பெயருடைய இந்த குட்டி குரங்கு, பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.
இதனால் அக்குட்டியின் தனிமையைப் போக்க பூங்கா ஊழியர்கள் அதற்கு ஒரு குரங்கு பொம்மையைத் துணையாக வழங்கினர். தற்போது அந்த பொம்மையையே தனது உலகமாக கருதும் பஞ்ச், எங்கு சென்றாலும் அதனை விடாமல் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் அக்குட்டி மற்ற குரங்குகளுடன் சேர்த்து விடப்பட்ட போதிலும், பொம்மையின் மீதான அதன் பாசம் குறையவில்லை. பொம்மையை மார்போடு அணைத்தபடி அக்குட்டி தூங்கும் மற்றும் விளையாடும் காட்சிகள் பார்ப்போரின் கண்களைக் குளமாக்குவதுடன், தாயின் அரவணைப்புக்காக அது ஏங்குவதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
