வடக்கு ஸ்வீடன் பகுதியில், தனது மனைவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதன் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பணம் சம்பாதித்த 60 வயது முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவர் இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்வீடன் நாட்டுச் சட்டப்படி பாலியல் சேவைகளை வாங்குவது குற்றமாகும், ஆனால் விற்பது குற்றம் அல்ல என்பதால், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 120-க்கும் மேற்பட்ட ஆண்கள் மீது விசாரணை பாய உள்ளது.

​தற்போது அந்த நபர் மீது “புரோக்கர்” (Procuring) தொழில் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியைக் கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்தினாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மார்ச் 13-ஆம் தேதி அவர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே பல குற்றப் பின்னணிகளைக் கொண்ட அந்த நபர், தன் மீதான புகாரை மறுத்து வந்தாலும், சிக்கியுள்ள 120 வாடிக்கையாளர்களின் பட்டியல் அவரைச் சிக்க வைக்கும் எனத் தெரிகிறது.