மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 காவலர்களும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களின் ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், “இந்தக் கொலை வழக்கை அடுத்த 6 மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையைப் பாதிக்கும் என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. காவல்துறையினரே இது போன்ற வழக்கில் சிக்கி ஜாமீன் கிடைக்காமல் கம்பி எண்ணி வருவது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிடலாம்’ என நம்பியிருந்த அந்த 4 காவலர்களுக்கும், ஹைகோர்ட்டின் இந்த “6 மாத கெடு” உத்தரவு பெரிய இடியாக இறங்கியுள்ளது.
