உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் ஆடுகளுக்கு நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட பிறந்தநாள் விழா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடுகளின் உரிமையாளர் தனது செல்லப்பிராணிகள் மீது கொண்ட அளவற்ற பாசத்தினால், மனிதர்களுக்கு நிகராக “ராயல்” முறையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இதற்காக கிராமம் முழுவதும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முறையாக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. விலங்குகளுக்காக நடத்தப்பட்ட இந்த வினோத விழா அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்த பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக, கிராமத்து இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று DJ இசையின் அதிரடி தாளங்களுக்கு ஏற்ப நடனமாடினர். ஆடுகளுக்குப் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஒரு செல்லப்பிராணியை வெறும் விலங்காகப் பார்க்காமல், குடும்ப உறுப்பினராகக் கருதி இவ்வளவு பெரிய அளவில் விழா எடுத்த உரிமையாளரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வித்தியாசமான கொண்டாட்டம் ஹர்தோய் கிராமத்தையே ஒரு திருவிழா போல மாற்றியது.