தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாமல் உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை தாமதமாவதற்கு காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் சில முக்கிய கோரிக்கைகளே காரணம் எனத் தெரிகிறது. குறிப்பாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் இடம் (பங்கு) அளிக்கப்பட வேண்டும். கடந்த தேர்தல்களை விட இந்த முறை அதிக சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் குறிப்பிட்ட இடங்களை இப்போதே உறுதி செய்ய வேண்டும் போன்றவைகளாகும்.

இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், தங்களது அகில இந்தியத் தலைமைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக-விடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த நிபந்தனைகளை திமுக தலைமை ஏற்குமா அல்லது கூட்டணியில் மாற்றம் நிகழுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.