அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிக முக்கியமான வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை ஒன்றிணைப்போம், மீண்டும் அவரது ஆட்சியை அமைப்போம் என்று சொல்பவர்கள் அனைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA) தங்களது ஆதரவைத் தர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

​மேலும் பேசிய அவர், “அம்மா ஆட்சியை அமைப்போம் என்று கூறிவிட்டு, இப்போது NDA கூட்டணிக்கு ஆதரவு தரத் தயங்குபவர்களைத் தமிழ்நாட்டு மக்களும், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விரைவில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் அனைத்துத் தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவும், கூட்டணி பலத்தை அதிகரிக்கவும் டிடிவி தினகரன் எடுத்துள்ள இந்த முயற்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.