இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் சாகசங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில், காட்டின் ராஜாவான சிங்கத்தின் வாய்க்குள் இளைஞர் ஒருவர் மிகச் சாதாரணமாக விரலை விட்டு வம்பு செய்யும் வீடியோ இணையவாசிகளை உறைய வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ‘beyond_the_wildlife’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தின் முகத்தைத் தொட்டும், அதன் வாய்க்குள் விரலை விட்டும் அந்த இளைஞர் சீண்டுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Beyond the Wildlife (@beyond_the_wildlife)

இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் கர்ஜித்த போதிலும், அந்த இளைஞர் துளியும் பயமில்லாமல் தொடர்ந்து சிங்கத்திடம் விளையாடுகிறார். விசாரணையில், அவர் அந்த சிங்கத்தைப் பராமரிக்கும் பயிற்சியாளர் (Trainer) என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக ஒரு சிங்கத்தை மனிதர்களுடன் பழக வைக்க 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலப் பயிற்சி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், “இது உண்மையான பாசம்” எனப் புகழ்ந்தாலும், பலர் “சிங்கம் ஒன்றும் வளர்ப்புப் பிராணி கிடையாது, இது போன்ற விபரீத விளையாட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும்” என எச்சரித்து வருகின்றனர்.