நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல ‘ரிவால்டோ’ காட்டு யானை இன்று உயிரிழந்தது.
கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானைக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்தது.
அந்தப் பகுதி மக்களுடன் மிகவும் இணக்கமாகப் பழகி வந்த ரிவால்டோ யானையின் மறைவு, கூடலூர் கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
