கடந்த 8 ஆண்டுகளாக தாம் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தவில்லை என்று பிரபல நடிகை ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை குறித்துப் பேசிய அவர் சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் கைப்பேசிகளுக்கு அடிமையாகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர் நேரத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத் தவறிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். மெய்நிகர் உலகத்தை விட நேரடி மனித தொடர்புகளையே தாம் அதிகம் விரும்புவதாகவும் அதனால் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தகவல் தொடர்பு செயலிகளில் இருந்து விலகி இருப்பதாகவும் அவர் கூறினார்.
View this post on Instagram
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதே தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த ரஜிஷா தொலைபேசி அழைப்புகளை விடவும் நேரில் சந்தித்துப் பேசுவதே அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களுக்கிடையேயான நேரடி உரையாடல்கள் குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவரின் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கைப்பேசி மோகத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களுக்கு ரஜிஷா விஜயனின் இந்த முடிவு ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுவதாக இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
