சமூக வலைதளங்களில் தந்தை மற்றும் மகன் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் நெகிழ்ச்சிகரமான காணொளி ஒன்று தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு உணவகத்தில் தனது காதலியுடன் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞர் அதே இடத்திற்கு உணவு விநியோகப் பணியாளராக வந்த தனது தந்தையைக் கண்டு சற்றும் தயங்காமல் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திய செயல் பலரது இதயங்களை வென்றுள்ளது.
View this post on Instagram
தன் தந்தை செய்யும் சாதாரணப் பணியால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று நினைக்காமல் அவரை ஆரத்தழுவி அழைத்துச் சென்ற அந்த இளைஞனின் உயரிய பண்பு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக செய்யும் கடின உழைப்பை கௌரவிக்கும் வகையில் அமைந்த இந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் உழைப்பின் மதிப்பையும் பெற்றோரின் தியாகத்தையும் பறைசாற்றுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
