அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 209 ரன்களைக் குவித்தது.
அபிஷேக் சர்மா இல்லாத நிலையில், தொடக்க வீரராகக் களம் கண்ட சஞ்சு சாம்சன், ஆரம்பம் முதலே நமீபிய பந்துவீச்சைச் சிதறடித்தார். வெறும் 7 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி என 22 ரன்களை விளாசிய அவர், 8-வது பந்தில் பென் ஷிகோங்கோ வீசிய ஸ்லோ டெலிவரியில் அவுட் ஆனார்.
அவர் ஆட்டமிழந்த விதம், நமீபிய அணியின் திட்டமிட்ட வியூகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. சஞ்சு சாம்சன் பெவிலியன் திரும்பியபோது, நமீபிய அணியின் ஆலோசகர் கேரி கிறிஸ்டன் தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தது கேமராவில் பதிவானது. சஞ்சுவை வீழ்த்த வகுக்கப்பட்ட ‘பிளான்’ சரியாக வேலை செய்ததே அவரது சிரிப்புக்குக் காரணம் எனத் தெரிகிறது.
— Nihari Korma (@NihariVsKorma) February 12, 2026
2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக நடைபெறும் இந்தத் தொடர், சஞ்சு சாம்சனுக்கு மிக முக்கியமானது. நியூசிலாந்து தொடரில் பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்ட அவருக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், நிலைத்து நின்று ஆடாமல் அவசரப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் நமீபிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 61 ரன்களைக் குவித்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ஹர்திக் பாண்டியா, 28 பந்துகளில் 52 ரன்கள் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேலும் இறுதியில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
