டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (பிப். 12) நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான குரூப்-ஏ ஆட்டத்தில், இந்திய அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
போட்டியின் 15-வது ஓவரில், நமீபிய சுழற்பந்து வீச்சாளர் பெர்னார்ட் ஷோல்ட்ஸ் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் ஹர்திக் பாண்டியா விளாசினார். அது மைதானத்தின் கூரையைத் தொடும் வகையில் 109 மீட்டர் தூரத்திற்குச் சென்று விழுந்தது.
Hardik andar, gend bahar! 🔥
⚠️ Warning for the crowd: Mind your heads! 🫣
ICC Men’s #T20WorldCup | #INDvNAM | LIVE NOW 👉 https://t.co/aLGrwgVX5o pic.twitter.com/srOkvaRyZV
— Star Sports (@StarSportsIndia) February 12, 2026
“>
இதன் மூலம், இந்தத் தொடரின் மிக நீளமான சிக்ஸர் (Longest Six) என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சுவாரஸ்யமாக, அதே ஓவரின் முதல் பந்தில்தான் ஷிவம் துபே 107 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து சாதனை படைத்திருந்தார். ஆனால், அந்தச் சாதனை அடுத்த இரண்டு பந்துகளிலேயே ஹர்திக் பாண்டியாவால் முறியடிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் (52 ரன்கள்) மற்றும் இஷான் கிஷனின் (61 ரன்கள்) அதிரடியால் இந்தியா 209 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நமீபியா 116 ரன்களுக்குச் சுருண்டது.
