ஒரு மகள் தன் தந்தையிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. பூர்வி பஞ்சால் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் தந்தை தன் மகளை வழியனுப்பும் போது கண்ணீர் விட்டு அழுவதும், ரயிலுக்குள் இருக்கும் மகள் அவரைப் பார்த்து அழுவதும் பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.

சுமார் 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான ஆழமான பாசத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

தன்னுடைய பதிவில் பூர்வி, தான் எங்கு பயணப்பட்டாலும் தன் தந்தை இதேபோல ரயில் நிலையத்திற்கு வந்து கண்கலங்கி நிற்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். “தந்தை வயதாகி வருவதை நினைத்தால் பயமாக இருக்கிறது, அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” என்று அவர் உருக்கமாக வேண்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Purvii🐰 (@ipurvipanchal)

“>

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் பல இணையவாசிகள், “உங்களை யாரென்று தெரியாவிட்டாலும், இந்த வீடியோ எங்களை அழவைத்துவிட்டது” எனத் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.