தமிழகத்தின் அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பட்டியலை ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகத்தின் அருண்ராஜ் வரவேற்றுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், டிஜிபி நியமனம் தொடர்பாக தவெக பலமுறை கேள்வி எழுப்பியும் முதல்வர் ஸ்டாலின் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஒரு டிஜிபியைக்கூட முறையாக நியமிக்க முடியாத மாநிலம் எனத் தமிழகத்திற்கு திமுக அரசு அவப்பெயரைத் தேடித்தந்துவிட்டதாகவும் அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.