தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த முறை ‘இரட்டை இலக்க’ தொகுதிகளைக் குறிவைத்தாலும், குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது (மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு மற்றும் மதுரை மத்திய அல்லது தெற்கு) பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து, ராஜ்யசபா சீட்டை ஏற்றுக்கொண்ட கமல், இந்த முறை தனது சொந்தச் சின்னமான ‘டார்ச்லைட்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளாராம். இதற்கான தேர்தல் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே மநீம-விற்கு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது விருப்பத்தைத் தெரிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
