செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எனப்படும் ஏஐ துறையில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் கொரோனா பெருந்தொற்றை விடவும் மிகப்பெரிய பாதிப்புகளை உலகளவில் ஏற்படுத்தும் என ஹைப்பர்ரைட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேட் ஷுமெர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
— Matt Shumer (@mattshumer_) February 10, 2026
ஒரு சில நிறுவனங்களில் உள்ள மிகச்சில ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, எதிர்காலத்தில் அறிவுசார் பணிகளான சட்டம், மருத்துவம், இதழியல் மற்றும் கணினி மென்பொருள் துறைகளில் பெரும் மாற்றங்களை மிகக்குறுகிய காலத்தில் கொண்டு வரும் எனவும், இது வெறும் தொடக்கமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்களின் சிந்திக்கும் திறனுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் இந்த தொழில்நுட்பம், பல வேலைவாய்ப்புகளை பறிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இப்போதே இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும், நிதி ரீதியான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என அவர் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.
