தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக புதிய வீடுகள் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் முழுவதும் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இத்திட்டத்தின் முதன்மை இலக்காகும்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அறிவிப்பு, ஊரகப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.