தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 210 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியல் ரீதியாகத் தனக்கும் டி.டி.வி தினகரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தற்போது சரியாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, இது குறித்து ஏற்கனவே பலமுறை தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்கிவிட்டதாகக் கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
