மும்பை குர்லா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த மூதாட்டியை, அங்கு பணியிலிருந்த ஜான் பால் என்ற டிக்கெட் பரிசோதகர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பத்திரமாக மீட்டார். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தனக்கு மறுவாழ்வு அளித்த ஜான் பாலுக்கு அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
🚨 Life-saving act at Kurla Station
On 07.02.2026 at about 12:30 hrs, Shri John Paul, CCTC/Kurla, displayed exemplary presence of mind and courage by saving an elderly lady passenger who slipped while alighting from a moving local train at Kurla station.
The grateful passenger… pic.twitter.com/IieF6yWb0v— DRM Mumbai CR (@drmmumbaicr) February 11, 2026
இதனிடையே, தானே மாவட்டம் பட்லாபூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் ஏற முயன்ற 28 வயதான சேதனா என்ற பெண், தவறி விழுந்து ரயிலடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில், வேலைக்குச் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
