உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரே தனது கள்ளக்காதலனுடன் இணைந்து, கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ரன்வீர் சிங் (45) மற்றும் பூஜா (40) ஆகிய இருவரும் தம்பதியினர்.
இந்நிலையில், பூஜாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது சட்டவிரோத உறவு குறித்து அறிந்த கணவர் ரன்வீர் சிங், தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூஜா, தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தன்று, பூஜா தனது கணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரை போதையில் ஆழ்த்தியுள்ளார். கணவர் சுயநினைவின்றி இருந்த சமயம் பார்த்து, பூஜா மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் சேர்ந்து ரன்வீர் சிங்கை கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், குற்றத்தை மறைக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
