கேரளா மாநிலம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில் அரங்கேறியுள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஸ்பாவிற்குள் புகுந்து, அங்கு பணிபுரிந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று பூட்டியுள்ளனர்.
மேலும் சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்த கொடூர சம்பவத்தில், அந்தப் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் ஒரு கூலிப்படைத் தாக்குதல் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டதாகவும், இது தொழில் போட்டி காரணமாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ‘மரண சுபின்’ என்று அழைக்கப்படும் சுபின் அலெக்சாண்டர் மற்றும் பெர்லின் தாஸ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளியான சுபின் மீது ஏற்கனவே ‘காப்பா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அச்சட்டத்தைச் செயல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து பணம் பறிக்க முயன்றதோடு, இச்சம்பவத்தை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பியோடிய மீதமுள்ள நான்கு பேரைக் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
