தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு மாவட்ட செயலாளர் விஜய் பாலாஜி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து மிகவும் கலகலப்பாகப் பேசினார். செங்கோட்டையன் அவர்கள் தவெக-வில் இணைந்த பிறகு, ஒரு 20 வயது இளைஞரைப் போன்ற சுறுசுறுப்புடன் செயல்படுவதாக அவர் பாராட்டிப் பேசினார். செங்கோட்டையன் அண்ணனின் வேகத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றும், அவரோடு போட்டி போட முடியாமல் தான் தற்போது வேட்டிக்கு பதிலாக பேண்ட் அணிந்து சுற்றி வருவதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

​விஜய் பாலாஜியின் இந்த கலகலப்பான பேச்சைக் கேட்ட செங்கோட்டையன் மேடையிலேயே வெட்கப்பட்டு சிரித்தது அங்கிருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் பேசிய விஜய் பாலாஜி, “நாம ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்பே தவெக-வில் இணையவில்லை என்று செங்கோட்டையன் அண்ணன் இப்போது வருத்தப்படுகிறார்” என்று கூறி தொண்டர்களை வியப்பில் ஆழ்த்தினார். மூத்த தலைவர்களின் வருகை தவெக-வுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளதை இந்த நிகழ்வு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.