தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் வரும் 13-ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் சில முக்கியமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டும்; போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது; முக்கியமாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி இல்லை எனப் பல அதிரடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
