அமெரிக்க அணியைச் சாதாரண அணியாகக் கருதிய நிலையில், அவர்களின் மிரட்டலான பந்துவீச்சால் இந்திய அணி நிலைகுலைந்து போனது.
தொடக்கத்திலேயே அபிஷேக், துபே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தனர்.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், தனி ஆளாகப் போராடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
