பெங்களூருவில் திறந்த நிலையில் இருந்த பள்ளத்தில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சியில், சிறுவன் சாலையோரம் நடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக மூடி இல்லாத ஆழமான பள்ளத்திற்குள் விழுவது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவம் டெல்லியில் சமீபத்தில் திறந்தவெளி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பைக் ஓட்டியின் துயரமான நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

இந்நிலையில் மழைக்காலங்களில் இதுபோன்ற திறந்தவெளி பள்ளங்கள் மற்றும் கால்வாய்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் நிலவும் இத்தகைய குறைபாடுகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.