மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு விடுதி பகுதியில், இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் மிக மோசமான முறையில் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு நபர் திடீரென அவரிடம் தவறாக நடக்க முயன்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், அப்பகுதியில் வசிக்கும் மாணவிகள் மற்றும் பெண்களிடையே பெரும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Chhatrapati Sambhajinagar | CCTV | अंगावर शहारे आणणारा व्हिडिओ | NDTV मराठी#chhtrapatisambhajinagar #CCTVCamera #CrimeNews #MaharashtraNews #ndtvmarathi pic.twitter.com/IhBMYoQIrT
— NDTV Marathi (@NDTVMarathi) February 6, 2026
“>
இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் அதிகம் உள்ள பகுதியில் இத்தகைய துணிச்சலான அத்துமீறல் நடந்திருப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
