உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டிய தருணம் பெரும் சோகமாக மாறியுள்ளது. திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகளின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது மாமா, யாருமே எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்க முயன்ற போதிலும், அவர் விழுந்த சில நொடிகளிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இந்த அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. மகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமண வீட்டார், இந்த திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போயினர். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
चलते – फिरते, हंसते- गाते, उछलते-नाचते लोग गिर रहे है और मर रहे हैं लेकिन सरकार को घंटा फ़र्क़ नहीं पड़ रहा.
ये देखिए, शादी समारोह में चलता फिरता शख़्स गिरा और मौत हो गई.मृतक दुल्हन का मामा था. इस मौत के बाद शादी का माहौल मातम में बदल गया.घटना यूपी के झांसी की है. pic.twitter.com/7Y7jd0jhdd
— Priya singh (@priyarajputlive) February 5, 2026
“>
இந்நிலையில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மங்கல நிகழ்வு, கண்ணீரும் கவலையும் நிறைந்த இடமாக மாறியது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிழைப்பிற்காக ஓடும் மனித வாழ்க்கையில், மரணம் எந்த ரூபத்தில் எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
