பாகிஸ்தானின் லாகூர் நகரில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள வசந்த காலப் பட்டம் விடும் திருவிழாவை ஒட்டி, இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது பாதுகாப்பிற்காக வினோத முறையைக் கையாண்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by علی خان👑 (@mr._.aliak)

பட்டம் விடும்போது பயன்படுத்தப்படும் கூர்மையான மாஞ்சா நூல்கள் கழுத்தை அறுத்து விபத்துகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் தங்கள் மோட்டார் சைக்கிள்களின் முன்பகுதியில் நீளமான இரும்பு கம்பிகள் அல்லது உலோகக் குச்சிகளைப் பொருத்தி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் காற்றில் பறந்து வரும் பட்டத்தின் நூல்கள் நேரடியாக ஓட்டுநரின் கழுத்தைத் தாக்காமல் இந்த இரும்பு கம்பிகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டிருந்த இந்தப் பட்டம் விடும் திருவிழாவை அரசு மீண்டும் அனுமதித்துள்ள நிலையில், விபத்துகளைத் தவிர்க்க மக்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.