ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பில் கேட்ஸ் இடையேயான உறவு குறித்த புதிய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மிலா அந்தோனோவா என்ற ரஷ்ய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனையுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி எப்ஸ்டீன் பில் கேட்ஸை மிரட்ட முயன்றதாகத் தெரிகிறது.
இது குறிப்பாக, அந்தோனோவாவின் கல்விச் செலவை ஏற்குமாறு எப்ஸ்டீன் கேட்டபோது, பில் கேட்ஸ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த எப்ஸ்டீன், பில் கேட்ஸ் ஒரு “மகா கஞ்சன்” என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் விமர்சித்ததாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் எப்ஸ்டீன் மற்றும் கேட்ஸ் இடையேயான இந்த மோதல் குறித்து, 2017-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கேட்ஸிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அந்தோனோவாவின் மென்பொருள் நிரலாக்கப் பயிற்சிக்கான கட்டணத்தைத் திருப்பித் தருமாறு அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் அறக்கட்டளை மூலம் எப்ஸ்டீன் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்காததால், இந்த ரகசிய உறவைப் பயன்படுத்தி அவர் பழிவாங்கத் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தவிதமான நிதித் தொடர்போ அல்லது நட்பு ரீதியான நெருக்கமோ இல்லை என்று பில் கேட்ஸ் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
