“என்னிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள், எனக்கு இன்னும் 11 வயது தான் ஆகிறது” என்று சிறுவன் ஒருவன் தனது மாமாவின் திருமணத்தில் பேசிய நகைச்சுவையான பேச்சு தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

மேலும் மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்த மேடை ஏறிய அந்தச் சிறுவன், வழக்கமான உணர்ச்சிகரமான பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு, தனது மழலை மாறாத குரலில் யதார்த்தமாகப் பேசியது அங்கிருந்த விருந்தினர்களைச் சிரிப்பலைகளில் மூழ்கடித்தது.

“>

இந்நிலையில் குறிப்பாக, வாழ்க்கையைப் பற்றிய பெரிய தத்துவங்களையோ அல்லது அறிவுரைகளையோ தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று அவன் வெளிப்படையாகக் கூறிய விதம் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

அந்தச் சிறுவனின் தன்னம்பிக்கையையும், நகைச்சுவை உணர்வையும் பாராட்டி வரும் இணையவாசிகள், “இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்” என்றும், “திருமண விழாக்களில் இது போன்ற கலகலப்பான தருணங்கள் தான் என்றும் நினைவில் நிற்கும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.