ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அதிரடி சட்டத்தைக் கொண்டு வரவுள்ளார். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினைத் தொடர்ந்து கிரீஸ் நாடும் இதே போன்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது உலக அளவில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்குச் சமூக வலைதளத் தடை சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மோசடிகள் மற்றும் தேவையற்ற உள்ளடக்கங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பல நாடுகள் இப்போது இந்த ‘டிஜிட்டல் லாக்டவுன்’ முறையைக் கையில் எடுத்துள்ளன. இந்த அதிரடி மாற்றங்கள் எதிர்காலத் தலைமுறையினரைத் திரைக்குப் பின்னாலிருந்து மீட்டு நிஜ உலகிற்கு அழைத்து வரும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
