அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ரஷ்யாவிற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இந்தியா சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த கூடுதல் வரிகள் நீக்கப்பட்டு, தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தகப் பதற்றம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. இருப்பினும்,