அதிமுகவில் 9 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது அவருக்கு த.வெ.க-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள த.வெ.க அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும், அக்கட்சித் தலைவர் விஜய்யின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரும் தேர்தலில் கோபி தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக நாளை மறுநாள் (பிப்ரவரி 6) விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும் அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.
