ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞர், சக பயணிகளின் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் சிகரெட் பிடித்துள்ளார்.
அங்கிருந்த மற்றொரு பயணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயிலில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்று எடுத்துக்கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் சிகரெட்டை அணைக்க மறுத்ததோடு, அந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி, இருவருக்கும் இடையே மோதலாக மாறியது. தன்னைக் கேள்வி கேட்ட நபரால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், திடீரென தனது இடுப்பு பெல்ட்டை கழற்றி அந்தப் பயணியை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
இதனால் ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்தனர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வருவதுடன், பொது இடங்களில் நாகரீகம் தெரியாமல் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
🚨Cigarette in the Train
Civic sense Gone🚨Is civic sense actually dead? 💀 Imagine being so entitled that you light up a cigarette in a crowded train car. We’re all just side characters in this guy’s lungs apparently.
When did “respect for public space” become optional?… pic.twitter.com/BDHLcDp54Q
— ಕನ್ನಡ್ವಿರಾಟ (@kohlificationn) February 3, 2026
“>
ரயிலில் புகைபிடித்தது மட்டுமன்றி, தட்டிக்கேட்டவரைத் தாக்கிய அந்த இளைஞரின் செயல் தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
