மும்பை காந்திவிலி பகுதியில் காயங்களுடன் சாக்கடையில் கட்டப்பட்டிருந்த வயதான நாய் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது இளைஞரின் இந்த அநாகரீகச் செயலை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க, தெரு நாய்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது. தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த வழக்கில், மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் கடந்த பல ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாய்கள் எப்போது கடிக்கக் கூடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களை நாய்கள் இல்லாத மண்டலங்களாக மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாநில அரசுகள் அதிக இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ள நீதிமன்றம், இந்த வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.