நமது வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்குப் பின்னால் பல வலிகளும் போராட்டங்களும் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில், ‘ஆயுஷ் கோஸ்வாமி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட மாற்றுத்திறனாளி ஜொமேட்டோ ஊழியரின் வீடியோ பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், தான் ஒரு தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர் என்றும், தற்போது வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு டெலிவரிக்கும் அவருக்கு 30 முதல் 50 ரூபாய் வரை கிடைப்பதாகவும், மாதம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரை ஈட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தளரவில்லை. “என் மனைவியும் ஒரு மாற்றுத்திறனாளி தான், நான் வேலை செய்யாவிட்டால் எங்கள் வாழ்க்கை எப்படி நடக்கும்?” என்று அவர் கேட்கும் கேள்வி அனைவரையும் நெகிழச் செய்கிறது.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், மனநிறைவோடு உழைப்பதில் தான் நிம்மதி இருக்கிறது என்றும், எந்தச் சூழ்நிலையிலும் கடவுளுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியாக இருப்பதே தனது தாரக மந்திரம் என்றும் அவர் கூறுகிறார்.

“>

 

இந்தியாவிற்காக ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வீரரின் மன உறுதி, பலருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.