கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது மற்ற கட்சிகள் அதிக இடங்களைக் கேட்பதை உரிமையாகப் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், தேமுதிக அதே கோரிக்கையை முன்வைக்கும்போது மட்டும் அதை ‘பேரம்’ என்று கொச்சைப்படுத்துவதாகப் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“மற்ற கட்சிகள் கேட்டால் அது கூட்டணி உடன்பாடு, தேமுதிக கேட்டால் மட்டும் பேரமா? இதில் என்ன நீதி இருக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், தனது கட்சிக்கான நியாயமான தொகுதிகளைக் கேட்பது ஜனநாயக உரிமை என்றும், அதைத் தவறாகச் சித்தரிப்பது முறையல்ல என்றும் அவர் மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
