தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்த பைனான்ஸ் அதிபர் பாண்டி  மர்ம நபர்களால் அவரது வீட்டு வாசலிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவர் தனது இருசக்கர வாகனத்தில் ரேஷன் கடைக்குச் செல்ல முயன்றபோது, திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இந்நிலையில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த பாண்டி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தேனி காவல்துறையினர் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தேனி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.