டெல்லியின் பரபரப்பான சாலையில் பேருந்தில் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கண்பார்வையற்ற தம்பதி மற்றும் அவர்களது குழந்தைக்கு முகமது சல்மான் என்ற இளைஞர் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

சுற்றியுள்ள மக்கள் அதைக் கண்டு கொள்ளாமல் சென்ற நிலையில், சல்மான் அவர்களுக்கு உதவியதுடன், “இதைப் பார்த்த பிறகு என் வாழ்க்கையைப் பற்றிப் புகார் செய்ததற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியின் கஷ்டங்களைப் போக்கப் பலரும் முன்வந்து நிதி உதவி அளித்தனர். அந்தத் தம்பதிக்குத் தேவையான 5500 ரூபாயை விடக் கூடுதல் நிதி சில மணி நேரங்களிலேயே வசூலானதாகச் சல்மான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mohammad Salman (@message_by_salman)

“>

“இதுதான் சமூக வலைதளத்தின் வலிமை” என்று அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை உணர்த்தும் இந்தச் செயல், ஆயிரக்கணக்கான மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதோடு, மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தையும் தூண்டியுள்ளது.