உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ரயிலின் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அவரிடம் டிக்கெட் பரிசோதகர் கேள்வி கேட்டபோது, “நான் பணியில் இருக்கிறேன், நான் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்?” என்று மிகவும் திமிராகப் பதிலளித்துள்ளார்.

தன்னுடன் மற்ற காவலர்களும் ரயிலில் இருப்பதாகக் கூறிய அவர், தன்னிடம் ரயில்வே பாஸ் எதுவும் இல்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இந்த உரையாடலின் போது அந்த அதிகாரி டிக்கெட் பரிசோதகரை மிரட்டும் தொனியில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வீடியோ எடுப்பவரைப் பார்த்து, “நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், அடுத்த முறை உன்னைச் சந்திக்கும்போது கவனித்துக்கொள்கிறேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே, சட்டத்தை மீறுவதோடு மட்டுமன்றி பொது ஊழியரை மிரட்டியது பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வீடியோ எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்குப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“பாதுகாவலர்களே குற்றவாளிகளாக மாறினால் சாதாரண மக்களின் நிலை என்ன?” எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Truth On Track (@truth_on_track)