ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சுமார் 10 முதல் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால், நடப்பு பிப்ரவரி 2026 மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான நாட்கள் வங்கிகள் செயல்படும்.
பிப்ரவரி 1, 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், பிப்ரவரி 14 மற்றும் 28 ஆகிய தேதிகள் முறையே இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை என்பதாலும் இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இது தவிர, பிப்ரவரி 18 அன்று லோசார் பண்டிகைக்காக சிக்கிமிலும், பிப்ரவரி 19 அன்று சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவிலும், பிப்ரவரி 20 அன்று மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில தினத்திற்காகவும் அந்தந்த மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
