இயற்கையோடு விளையாடினால் என்னவாகும் என்பதற்கு சாட்சியாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவி வருகிறது. கிராமப்புறம் ஒன்றில் சிறுவன் ஒருவன் விளையாட்டாக சுவற்றின் இடுக்குப் பகுதியில் இருந்த தேனீக் கூட்டை குச்சியால் சீண்டிய நிலையில், ஆக்ரோஷமடைந்த தேனீக்கள் அந்தச் சிறுவனையும் அவனது நண்பனையும் விரட்டி விரட்டி கொட்டின. இதில் தப்பிக்க ஓடியும் பலனின்றி, தேனீக்களின் பிடியில் சிக்கிய அந்தச் சிறுவனின் முகம் மற்றும் உதடுகள் தேனீக்கள் கொட்டியதில் பலூன் போல மோசமாக வீங்கி விகாரமானது.

“இயற்கையை சீண்டினால் இயற்கை நம்மை சும்மா விடாது” என்ற பாடத்தை உணர்த்தும் வகையில் உள்ள இந்த 12 விநாடி வீடியோ, தற்போது ‘எக்ஸ்’ தளத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ‘தேவையில்லாத வேலைக்கு இதுதான் சரியான பலன்’ என்றும், ‘உழைப்புக்கு ஏற்ற பலன் தாராளமாக கிடைத்துவிட்டது’ என்றும் கிண்டலாகவும் எச்சரிக்கையுடனும் பதிவிட்டு வருகின்றனர்.