சமூக வலைதளங்களில் ‘டான்சிங் பாட்டி’ ஒருவரின் நடனம் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்த முதியவர் ஆடும் துடிப்பான நடனம் மற்றும் முகபாவனைகள் இளைஞர்களையே மிஞ்சும் வகையில் உள்ளன.

தனது வீட்டின் முன்பு கவலை ஏதுமின்றி அவர் ஆடும் இந்த வீடியோவை இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 8.5 லட்சம் பேர் இந்த வீடியோவை விரும்பி பகிர்ந்து வருகின்றனர்.

இருப்பினும், இந்தப் பாட்டியின் அசாத்தியமான நடனம் இது நிஜம்தானா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதே பாட்டி ‘குங்ஃபூ’ செய்வது போன்ற மற்ற வீடியோக்களும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதால், இது உயர்தர எடிட்டிங் மற்றும் AI தொழில்நுட்பத்தின் கைவண்ணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ali Muddin Mollah (@free_boys_help)

“>

எது எப்படியோ, “பாட்டி அதிரடி, பார்ப்பவர்கள் அதிர்ச்சி!” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.