கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நியூசிலாந்து தொடரின் கடைசி டி20 போட்டிக்காக இந்திய அணி வந்திறங்கியபோதுதான் இந்தச் சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஏர்போர்ட்டில் சஞ்சு சாம்சனைச் சூழ்ந்த ரசிகர்களைப் பார்த்து, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் திடீரென ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் போல மாறிவிட்டார். “வழி விடுங்க.. வழி விடுங்க.. சேட்டாவைத் தொந்தரவு செய்யாதீங்க!” (Don’t Disturb Chetta) என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே சஞ்சுவுக்குப் பாதுகாப்பு கொடுத்தபடி அவர் நடந்தார். கேப்டனின் இந்த ஜாலியான குறும்புத்தனத்தைப் பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

​விஷயம் இதோடு முடியல! இந்த வீடியோவை சிஎஸ்கே (CSK) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “கேப்டன் ஸ்கை கூட்டணியில் சேட்டன் லேண்டிங்!” என்று பதிவிட்டுள்ளது. 2026 ஐபிஎல் ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ள நிலையில், இந்த வீடியோ மஞ்சள் படை ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் சனிக்கிழமை நடக்கவுள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவாரா? டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது!