விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு தனி நீதிபதி வழங்கிய ‘U/A’ சான்றிதழ் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் (CBFC) தொடர்ந்த இந்த வழக்கில், இன்று நீதிமன்றம் தணிக்கை வாரியத்தின் சில வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

​இருப்பினும், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு சுலபமான வழி உள்ளதாகத் திரையுலகினர் கருதுகின்றனர். தயாரிப்பு நிறுவனமான KVN, நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, தணிக்கை வாரியம் ஏற்கனவே பரிந்துரைத்த 14 மாற்றங்களை (Cuts) செய்துவிட்டு மீண்டும் விண்ணப்பித்தால் உடனடியாகச் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படிச் செய்தால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே தணிக்கைச் சான்றிதழ் பெற்று, படத்தை பிப்ரவரி முதல் வாரத்திலோ அல்லது இரண்டாம் வாரத்திலோ ரிலீஸ் செய்ய முடியும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.