‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் சென்சார் போர்டுக்கு (CBFC) நெருக்கடி கொடுக்க கே.வி.என் (KVN) நிறுவனம் முயன்றதே ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் காரணம் என்று நடிகரும், சென்சார் போர்டின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.வி.சேகர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், சென்சார் போர்டு சொன்ன மாற்றங்களைச் சரியான நேரத்தில் செய்யாமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்திற்குச் சென்றது படக்குழுவின் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

​மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் நடிகர் விஜய் திட்டமிட்டே அமைதி காப்பதாக எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் அரசியல் அனுதாபத்தைத் திரட்டவே விஜய் இந்த மௌனத்தைக் கடைப்பிடிப்பதாக அவர் சாடியுள்ளது திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.