புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கிய குடும்பத்தினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தபோது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விலையுயர்ந்த காரின் முன்னே உரிமையாளரின் தாய் சிவந்த நிற சேலை அணிந்து அர்ச்சகரின் வழிகாட்டுதலோடு வழிபாடு செய்தபோது, காரின் பாதுகாப்பு வேண்டி தேங்காயைச் சுற்றி உடைத்துள்ளார்.

அப்போது அவர் அதிக வேகத்துடன் தேங்காயை உடைத்ததில் அதன் துண்டுகள் நேராகப் புதிய காரின் முன்பகுதியில் பட்டுத் தெறித்ததால் அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vardhan Vaigandla (@vardhan__vogue)

சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ள இந்தத் த்ரில்லான காணொளியைக் கண்ட இணையவாசிகள், ஒருவேளை காருக்குச் சிறு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் தாயின் பாசத்திற்கு முன்னால் அந்த இயந்திரம் ஒரு பொருட்டல்ல என்றும், அம்மாவின் ஆசீர்வாதம் இருக்கும்போது கவலைப்படத் தேவையில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.