கிராமப்புறங்களில் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையிலான நெகிழ்ச்சியான காணொளி ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிராமப்புறத் தொழுவம் ஒன்றில் அமர்ந்திருக்கும் எருமைக்கன்று ஒன்றை நோக்கி இளைஞர் ஒருவர் செல்லும்போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பிஞ்சு விலங்கு மிகுந்த உற்சாகத்துடன் தனது பற்களைக் காட்டிச் சிரிப்பது போன்ற பாவனையை வெளிப்படுத்துகிறது.
View this post on Instagram
முராரி சுமித் விலாக்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், அந்த இளைஞர் தான் அருகில் சென்றால் எருமைக்கன்று மகிழ்ச்சியடையும் என்று முன்னரே கூறியிருந்தது போலவே அந்த நிகழ்வு தத்ரூபமாக நடந்துள்ளது.
விலங்குகளின் உண்மையான அன்பையும் அவை மனிதர்களிடம் காட்டும் விசுவாசத்தையும் பறைசாற்றும் இந்தச் சம்பவத்தை நெட்டிசன்கள் பலரும் தங்களுக்குள் பகிர்ந்து வருவதுடன், இதுவே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான காதல் என்று நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
